துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கார் ஓட்டும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் அஜித் கார் ஒட்டும் அந்த காட்சியைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக, கார் பந்தயம் நடைபெறாத மாதங்களில் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என அஜித் வெளியிட்ட அறிவிப்பு, ரசிகர்களுக்கு வேதனையாக இருந்த நிலையில், தற்போது வெளியான இந்த வீடியோ ரசிகர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.