வயநாட்டில் ராகுல் தோல்வியடைவார்.. மோடி

74பார்த்தது
வயநாட்டில் ராகுல் தோல்வியடைவார்.. மோடி
மராட்டிய மாநிலம் நாண்டெட் தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் இந்த முறை அவர் தோல்வி அடைவார். மேலும், தேர்தலுக்குப் பிறகு அவர் வேறு பாதுகாப்பான இடத்தை தேடிக் கொள்ள வேண்டும். 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்குச் சென்றுவிட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி