2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் "அயோத்தி". இந்த படத்தில் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடித்திருந்தார். ஹீரோவாக சசிகுமார் நடித்திருந்தார். இந்நிலையில் ப்ரீத்தி அஸ்ராணி, நடிகர் கவினுடன் ஒரு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். அப்பட பணிகள் 90% முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.