போதையில் வந்த மாப்பிள்ளை - கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்

77பார்த்தது
போதையில் வந்த மாப்பிள்ளை - கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு நேற்று (ஏப்ரல் 19) திருமணம் நடைபெற இருந்தது. அப்போது, மாப்பிள்ளை கோலத்தில் வந்த இளைஞர், பேண்டு வாத்தியத்துடன் கல்யாண உற்சாகத்தில் நடனமாடியபடி மண்டபத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மணப்பெண், மாப்பிள்ளை அருகில் சென்றபோது, அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே கடுப்பான மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால், இளைஞரின் கல்யாண ஆசை போதையால் நாசமானது.