சில நடிகர்கள் டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார்கள். இதனால் ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது காயம் அடைகிறார்கள். அந்த வகையில் மராத்தியில் பிரபல நடிகராக இருக்கும் புஷ்கர் ஜோக் படப்பிடிப்பில் காயமடைந்தார். சமீபத்தில் அவர் ஸ்காட்லாந்தில் 'தர்மா - தி ஏஐ ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பின் சண்டை காட்சியின் போது கீழே விழுந்து காயமடைந்தார். தற்போது மும்பை வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கீழே விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.