2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

79பார்த்தது
2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பை அருகே சாலைமலைக்கரடு பகுதியில் விவசாயிகள் உழுது கொண்டிருந்தபோது, பழமையான, முதுமக்கள் தாழியின் உடைந்த மண்கலன்கள் கிடைத்துள்ளன. இதை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் கூறுகையில், இங்கு மனிதன் நாகரீகம், பண்பாட்டுடன் வாழ்ந்தது தெரிய வருகிறது. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி