பாஜகவை திணறடித்த ராகுல் காந்தி! ஊரெங்கும் அதே பேச்சு

72பார்த்தது
பாஜகவை திணறடித்த ராகுல் காந்தி! ஊரெங்கும் அதே பேச்சு
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக பேசிய ராகுல் காந்தி, அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜகவை திணறடித்தார். ராகுலின் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று ராகுலின் பேச்சை குறுக்கிட்டார். அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் பலமுறை பதற்றத்துடன் குறுக்கிட்டனர். இதையடுத்து அவரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ இன்றும் (ஜூலை 1) சமூகவலைதளங்களில் டிரண்டாகி பலரும் அது பற்றியே பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி