"இதுதான் பச்சை துரோகம்" - விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ

561பார்த்தது
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், “நமக்காக இல்லையென்றாலும், அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்காக ஓட்டு போடுங்கள். காசு வாங்கிவிட்டு வாக்களிப்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதைவிட பச்சை துரோகம் வாக்களிக்காமல் இருப்பது. நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்பதை விட நம்மை ஆள யார் தகுதியானவர்கள்? என்பதை பார்த்து வாக்களியுங்கள்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி