குளத்தூரில் 85, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியிலிருந்து 5, 000 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பைப் உடைந்ததால், அதிலிருந்து குடிநீர் வெளியேறி வீணாகிறது. அதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.