புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது!

605பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிகடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள பெட்டிகடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, ஆரியக்கோன்பட்டி, தென்னலூர் பகுதியில் புகையிலை விற்பனை செய்த அய்யப்பன் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி