புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவர் தங்கும் விடுதிக்கு பின்புற கிணற்றில் நாய் ஓன்று தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக அப்பகுதியில் இருந்து இலுப்பூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கிணற்றில் விழுந்த நாயை உயிருடன் மீட்டனர்.