புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம். இவரது மனைவி மேகலா. இந்நிலையில் தனது இரண்டு வயது குழந்தையுடன் கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மேகலா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இரண்டு வயது குழந்தையுடன் பெண் மாயமானது அவர்களது உறவினர்கள் மட்டுமல்லாது அப்பகுதி பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.