திருமயம்: போதை பொருள் விற்ற இரண்டு பேர் கைது!

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நகரில் உள்ள சில பேக்கரி கடைகளில் தமிழக அரசினால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வா கத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மலைக்குடிப்பட்டியில் சாலையோரம் இருந்த ஒரு பேக் கரியில் சோதனை மேற்கொண் டனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டி ருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர் பாக கடை உரிமையாளர் பரளியை சேர்ந்த சுப்பிரமணியன்(65). என் பவரை கைது செய்தனர். இதே போல் தேக்காட்டூரில் பெட்டிக் கடையில் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீ சார் சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து முத்துபழனி வேல்(45) என்பவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி