புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து கோழி அடித்து பலி கொடுத்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டமாகவே காணப்பட்டது.