இளம் பெண் தற்கொலை போலீசார் வழக்கு பதிவு!

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட அரிமளம் அருகே சிராயன்பட்டியை சேர்ந்த ஜான் பிரிட்டோ மனைவி மோனிஷா இவருக்கு வயது 32 இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மோனிஷா நேற்று வீட்டில் உள்ள உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அரிமளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அரிமளம் காவல்துறையினர் வீட்டு உத்தரத்தில் தூக்கும் மாட்டி தற்கொலை செய்து கொண்ட மோனிஷாவை உடலை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் மாட்டி உள்ளனரா? அல்லது குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா. என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
32 வயதே ஆன இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிராயம்பட்டியை சேர்ந்த பொதுமக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you