மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு போட்டி!

81பார்த்தது
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் அந்தர நாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அதே கிராமத்தில் உள்ள குளத்து கண்மாயில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மஞ்சுவிரட்டு போட்டியில் அதிகமான உயிரிழப்புகள் நடப்பதால் மாவட்ட ஆட்சியர் மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடை விதித்திருந்தார். உரிய அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி