முள்ளங்கி விளைச்சல் அமோகம்.. விவசாயிகள் மகிழ்ச்சி

56பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அரூர், மொரப்பூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர்களுக்கு மேல் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் சீதோஷண நிலை காரணத்தால் முள்ளங்கி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ முள்ளங்கி கிலோ ரூ.14 முதல் 20 வரை விற்பனையாகிறது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி