தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை நேரில் வழங்கிட பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச வேண்டியுள்ளதால் நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.