கிராவல் மண் கடத்திய ஐந்து பேர் கைது!

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பரளியில் அரசு அனுமதியின்றி காவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பெயரில் திருமயம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியர் தலைமையிலான போலீசார் பரளி கண்மாய் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அனுமதி இன்றி மண்வெட்டி கடத்திய வாகன ஓட்டுநர் கிளீனர் என ஐந்து பேரை கைது செய்தும் ஒரு ஜேசிபி இயந்திரம் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தற்பொழுது ஆற்று மணல், கிராவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மணல்கள் கடத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது அதனை காவல்துறையினரும் பிடித்து வந்தாலும் கடத்தல் காரர்கள் மேலும் மேலும் குற்றச்செயலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you