கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

68பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சியுடன் 11 ஊராட்சியை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்த 11 ஊராட்சியை சேர்ந்த 9பி, 9 ஏ, திருமலையா சமுத்திரம், முள்ளூர் ஊராட்சி, திருக்கட்டளை ஊராட்சி, நமணசமுத்திர ஊராட்சியில் மூன்று வார்டுகள், உள்ளிட்ட 11 ஊராட்சிகளை புதுக்கோட்டை மாநகராட்சி உடன் இணைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள் குறிப்பாக சாலை மறியல் கடையடைப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 3000 பேர் மனு கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள் ஆனால் இவை அனைத்திற்கும் திமுக அரசு செவிசாய்க்கவில்லை இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்திருந்தார் இதனை அடுத்து 11 ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் இன்று காலை அந்தந்த பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தினார்கள் குறிப்பாக ஊராட்சிகளிலேயே மிகப்பெரிய ஊராட்சியான முள்ளூர் ஊராட்சியில் இன்று காலை கிராம சபை கூட்டம் தொடங்கியது ஆனால் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் யாரும் அந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தொடர்புடைய செய்தி