கந்தர்வகோட்டையில் மினிவேன் மோதி காயமடைந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் ராமராஜ் (50) இவர், தனது மிதிவண்டியில் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனை எதிரே தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நெப்புகை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் ஓட்டி வந்த மினிவேன் மோதி பலத்த காயமடைந்தார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர்மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சனிக்கிழமை உயிரிழந்தார். விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜானகிராமன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.