கந்தர்வகோட்டைஅருகே புதுநகர் கிராமத்தில் விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி, வைகை, இராமேஸ்வரம், காசிதீர்த்தம் மற்றும் உள்ளூர் தீர்த்தம் சேர்த்து யாகசாலை தொடங்கப்பட்டது. யாகசாலை பூஜைகள் நிறைவில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போதுவானில் கருட பகவான் வட்டம் இட்டது. இதில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர்.