மாநில குத்துச்சண்டை போட்டி புதுகை மாணவருக்கு தங்கம்!

67பார்த்தது
மாநில குத்துச்சண்டை போட்டி புதுகை மாணவருக்கு தங்கம்!
புதுக்கோட்டை: தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை
கழகம் மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் சென்னையில் நடந்தன. ஜூனியர் ஆண் கள், பெண்கள் பிரிவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், ஜூனியர் ஆண்கள் பிரிவில் புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் சர்வதேச பள்ளி 5ம் வகுப்பு மாணவன் மோகித் தங்கப்பதக் கம் வென்றார். வெற்றிப்பெற்ற மாணவனை பள் ளியின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி