சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது எனவும், புதுச்சேரிக்கு 80 கி.மீ. தொலைவிழும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலின் வேகம் தற்போது 7 கி.மீ. ஆக குறைந்துள்ளது எனவும், கரையை நெருங்கும் போது புயல் நகரும் வேகம் மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.