புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட வம்பன் காலனி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.