கீரனுார் அருகே ஒடுக்கூர் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம்(அக். 19) இரவு விற்பனை முடிந்து விற்பனை தொகையை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு மேற்பார்வையாளர் மகேந்திரன் விற்பனையாளர் பொன். ராமன் ஆகியோர் வீட்டுக்குச் சென்றனர். இந்நிலையில் நேற்று(அக்.20) காலை மதுபானக் கடை திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பணியாளர்கள் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே 5 பெட்டிகளில் இருந்த 192 மதுபான பாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ. 26 ஆயிரத்து 880 ஆகும், அதேநேரத்தில், பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் தப்பியது. இதுகுறித்து மகேந்திரன் அளித்த புகாரின்பேரில் கீரனுார் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மதுபானக் கடையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடை முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.