கந்தர்வகோட்டை: கறம்பக்குடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளராக இருப்பவர் குணநீதி (28). நேற்று முன்தினம் (அக்.,17) இரவு மது அருந் திவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜெகதீஸை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து டாக்டர் ஜெகதீஸ் அளித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து குணநீதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.