தாத்தாவின் இறுதிச்சடங்கில் மின்சாரம் பாய்ந்து பேரன்பலி!

55பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் பாய்ந்து அவரது பேரன் இறந்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிஅய்யா மகன் விஷால் (18). இவரது தாத்தா பரமசிவம் உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது குளிரூட்டும் பெட்டியில் இருந்து தாத்தாவின் உடலை எடுத்தபோது திடீரென விஷாலின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் மயங்கி விழுந்த விஷாலை
கந்தர்வகோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து கந்தர்வகோட்டை போலீஸார் அவரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி