தைல மரக்காட்டில் தீ விபத்து!

84பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் தைல மர காட்டில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றியது.
ஆதனக்கோட்டை ஊராட்சியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான தைலமரக் காட்டில், மேலே செல்லும் மின் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
பொதுமக்களின் தகவலின்பேரில், கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
ஆடி மாத காற்று வேகமாக உள்ளதால் மின் கம்பிகள் செல்லும் பாதையில் பத்து மீட்டர் இடைவேளையில் உயரமான மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பெரும் சேதம் தவிர்க்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி