கந்தர்வகோட்டையில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, பேருந்துகள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தர்வகோட்டை பேரவை தொகுதியில்
100 % வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்ரீதர் மேற்பர்வையில், வட்டாட்சியர் எஸ். விஜயலெட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் பால்பாண்டி, தேர்தல் உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னினையில் வருவாய்த் துறையினர், மக்களவைத் தேர்தலில் அனைவரும் தவறாது 100% வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி அதற்கான விழிப்புணர்வு வில்லைகளை பேருந்துகள், ஆட்டோகளில் ஒட்டி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.