அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில், மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.