போன்கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 167 விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அப்போது ரமேஷ் என்பவருக்கு சொந்தமான TN 08 MM 1418 என்ற விசைப்படகில் தினேஷ், முரளி, செல்வம் மற்றும் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகிய நான்கு பேரும் சுமார் 32 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.