மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற கந்தூரி திருவிழா!

55பார்த்தது
இந்து பெண்கள் தீப்பந்தத்தை தூக்கி முன்போக, நடன நாட்டிய குதிரைகள் நடனமாடி செல்ல மேளதாள வாத்தியங்களுடன் வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற கந்தூரி திருவிழா. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி தாலுகாவில் உள்ள கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவில் வருடம் தோறும்கந்தூரி விழாவான சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தினசரி திருவிழா நடப்பது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இன்று தர்காவில் எதிர்புறம் உள்ள சந்தனக்கூடு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளை சுற்றி வந்து வான வேடிக்கையுடன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோட்டைப்பட்டினம் காவல்துறை கண்காணிப்பாளர் கௌதமன் தலைமையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் இந்த திருவிழாவானது வானவேடிக்கை தான் முக்கியமாக நடைபெறுவது வழக்கம்

தொடர்புடைய செய்தி