புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கார்க்கமலம் கிராமத்தில் நேற்று அறந்தாங்கி தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடிந்த நிலையில் சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோயில் காந்தளூர் சாலை கலமருத்தருளிய இராஜகேசரி பன்மரான அருண்மொழிவர்மன் நிறுவிய மிழலைக் கூற்றத்துக் கார்க்கமலம் பொதுவுடையார் கோயில் என ஆய்வாளர் காளிதாஸ் கூறினார்.