கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சியில் பசுமை வீடு அறிவித்தீர்கள். ஆனால் முழுமையாக செயல்படுத்தவில்லை. மே மாதம் 31ஆம் தேதிக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றார்.