அதிமுகவில் இபிஎஸ் மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே விரிசல் அதிகம் ஆகிக் கொண்டே வருவதற்கு உள்ளூர் அரசியலே காரணமாக கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் பரிந்துரை செய்த நபர் தோல்வியடைந்ததற்கு காரணம் உள்ளூர் அரசியலே என்றும், முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணனுக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதும், செங்கோட்டையனை ஆலோசிக்காமல் மாவட்டம் தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டதுமே அவரது கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.