

புதுகை: மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சாத்தையா (39) மதகம் டாஸ்மாக் அருகேயும் இலுப்பூர் சந்தப்பேட்டையை சேர்ந்த மருதமுத்து (72) பத்தாம் பட்டி டாஸ்மார்க் அருகேயும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.