ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - வீடியோ

556பார்த்தது
ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென நேற்று பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ஆலங்குடி, ஆலங்காடு, கொத்தமங்கலம், பள்ளத்திவிடுதி, பாத்தம்பட்டி, குப்பக்குடி, கல்லாலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஆலங்குடியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். அத்தோடு மழை நீர் பாதாள சாக்கடைக்குள் சென்று பாதாள சாக்கடை நிரம்பியதில் அதில் இருந்த கழிவு நீரும் மழை நீரோட சேர்ந்து வெளியேறியதால், பல்வேறு பகுதிகளிலும் துர்நாற்றம் வீசியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி