அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் , ஆணிகள் கண்டுபிடிப்பு!

57பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் மற்றும் ஆணிகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. அரண்மனைத் திடலில் செங்கல் கட்டுமானங்களும் கண்ணாடி மணிகள், பச்சைக்கல் மணி, கண்ணாடி வளையல்கள், இரும்பு ஆணிகள் போன்ற தொல்பொருட்களும் கிடைக்கப்பெற்றன.
இன்று பல்வேறு அளவுகளில் செம்பு ஆணிகள் ஐந்து கிடைத்துள்ளன. செம்பு ஆணி ஒன்று 2 கிராம் எடையும் 2. 3 செ. மீ நீளமும் 1. 2 செ. மீ தடிமனும் கொண்டுள்ளது. இதுவரை இரும்பினால் ஆன ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் தற்போது செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கண்ணிற்கு மைத்தீட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 3 செ. மீ நீளமுள்ள செம்பினால் ஆன அஞ்சனக்கோல் ஒன்றும் கிடைத்திருப்பது சிறப்பாகும். இத்தொல்பொருட்கள் பொற்பனைக்கோட்டையில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டுச் செழிப்பினை வெளிக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி