பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் மறு விசாரணை!

1061பார்த்தது
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் மறுவிசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று மீண்டும் சென்னையில் இருந்து வந்த 4 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கு பணிபுரிந்த வங்கி ஊழியர் மாரிமுத்து மற்றும் அவர் தொடர்புடைய நபர்களால் 13.75 கிலோ தங்கம் உள்பட பல்வேறு ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு விசாரணையானது சிபிஐ -இடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக வங்கியில் பணிபுரிந்த மாரிமுத்து என்பவர் மீமிசல் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் இறந்தார்.

இதனிடையே கடந்த மார்ச் 20ஆம் தேதி மதுரையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் இருந்து வந்த 4 சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி