தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக உதவி

52பார்த்தது
அரியாங்குப்பம் பி. சி. பி. நகர் 3-வது குறுக்கு வீதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ்- கமலி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனித்துக் கொள்ள கமலி ஆஸ்பத்திரிக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை ராஜேஷூம் ஆஸ்பத்திரிக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தைகள் 2 பேர் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து குடிசைவீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த்து. இதனால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடிசையை அதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நேரில் பார்வையிட்டு அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் பண உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருள் உள்ளிட்ட பொருள் உதவி வழங்கினார். அருகில் தொகுதி செயலாளர் ராஜா மற்றும் அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் பாலு, ஜெயக்குமார் மற்றும் அஜித் குமார், முத்துலிங்கம், கணபதி, பரமசிவம், காத்தவராயன் மற்றும தொகுதி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி