புதுவை: தீபாவளி ஒருநாள் மட்டும் 650 டன் குப்பைகள்

74பார்த்தது
புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் அதிக அளவில் சாலைகளில் காணப்பட்டன. அந்த குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்படி, நேற்று ஒரு நாள் மட்டும் 450 டன் குப்பையும், கிராமப் பகுதிகளில் 200 டன் குப்பையும் என மொத்தம் 650 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட் குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரே நாளில் 100 டன் குப்பைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்தி