ஆண் குட்டிகளை தாய் புலி தன் வாழ்விடத்திலிருந்து நெடுந்தூரம் விரட்டி அடித்து விடும். ஆண் புலிகள் தாயின் அருகிலேயே இருந்தால் அதனுடன் பிறந்த குட்டிகளுடனோ அல்லது சில நேரங்களில் தாய் உடனோ இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. இதனால் மரபணு குறைபாடு மற்றும் எதிர்கால சந்ததிகளின் பிறப்பில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தாய் புலிகள் ஆண் குட்டிகளை விரட்டி விடுகின்றன. குட்டிகள் பலவீனமாக இருந்தால் அதை தானே சாப்பிட்டு பலவீனமான சந்ததிகள் பெருகுவதை தடுக்கின்றன.