கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த துளசி கௌடா தனி ஒரு ஆளாக இருந்து ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்த்த பெருமை பெற்றவர் ஆவார். இவர் 'காடுகளின் களஞ்சியம்' என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு சமூக வனவளங்காப்பகம், 5 புலிகள் காப்பகங்கள், 15 பாதுகாப்பு சரணாலயங்கள், 30 வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவை உருவாவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இயற்கை ஆர்வலரான இவர் கடந்த டிச.16-ம் தேதி மறைந்தார்.