காரைக்காலில் நகராட்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் சார்பில் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி இன்று திடீரென்று 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.