காரைக்காலுக்கு வருகை புரிந்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், துணைநிலை ஆளுநரின் செயலர் நெடுஞ்செழியன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் காரைக்கால் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மக்கள் நலப் பணிகள் குறித்தும் காணொளி காட்சி மூலம் விவரித்தார்கள்.