காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜி. பி. எஸ் கீழஓடுதுறை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 35 மாணவர்களுக்கு புதுவை அரசால் இலவசமாக வழங்கப்படும் இலவச சீருடை மற்றும் அப்பள்ளிகள் மூலம் வழங்கப்படும் டைரி மற்றும் பெல்ட் ஆகியவற்றை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் இன்று மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் சேதம் அடைந்து உள்ளதால் அடுத்த ஆண்டு கூடுதலாக புதிய பள்ளி கட்டிடம் கட்டி தரப்படும் என தெரிவித்தார்கள்.