உயர் கல்வித்துறை புதிய அறிவிப்புகள் வெளியீடு

77பார்த்தது
உயர் கல்வித்துறை புதிய அறிவிப்புகள் வெளியீடு
கோவை, ஈரோடு, சென்னை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆண்கள் விடுதி கட்டிடம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு ஓய்வறை கட்டித்தரப்படும் என அவர் கூறியுள்ளார். GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என கூறிள்ளார்.

தொடர்புடைய செய்தி