விபச்சார கும்பல்: இளம்பெண்கள் உட்பட 6 பேர் கைது!

53பார்த்தது
விபச்சார கும்பல்: இளம்பெண்கள் உட்பட 6 பேர் கைது!
கோவை மசக்காளிபாளையம் டி.ஜே. நகரில் ஒரு ஹோட்டல் உள்ளது. இங்குள்ள 4வது மாடியில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு மசாஜ் செய்ய வரும் இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களை காட்டி விபச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விபச்சார புரோக்கர்கள் மற்றும் அழகிகளான சுங்கம் பைபாஸ் ரோடு ஸ்ரீ நகரை சேர்ந்த முகமத் ஆசிப் அவரது மனைவி சுமையா பேகம், நாகாலாந்தை சேர்ந்த மாயா, சிவானந்தா காலனியை சேர்ந்த லில்லி, கொல்கத்தாவை சேர்ந்த டெபலினா தாஸ், ஈரோட்டை சேர்ந்த சஹானா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய நபரான சேகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி