அரசியல் சாசனத்தை புகழ்ந்த பிரதமர் மோடி

63பார்த்தது
அரசியல் சாசனத்தை புகழ்ந்த பிரதமர் மோடி
ஏழ்மையிலும், பின்தங்கிய குடும்பத்திலும் பிறந்த என்னைப் போன்ற ஒருவரால் தேசத்துக்குச் சேவை செய்ய அரசியல் சாசனம்தான் காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரசியல் சாசன புத்தகத்தை தொட்டு வணங்கியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்காக எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் சாசனம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையையும், வலிமையையும், கண்ணியத்தையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி